ஆதரவற்ற மூதாட்டியினை மீட்ட அட்சயம் அமைப்பினர்

குமாரபாளையம் நகராட்சி பள்ளி அருகே பள்ளி குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஆதரவற்ற மூதாட்டியினை அட்சயம் அமைப்பினர் மீட்டனர்.

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே மூதாட்டி ஒருவர், தன் உடைமைகளை வைத்துகொண்டு, அங்கயே சமைத்து கொண்டு இருந்து வந்தார். பள்ளி விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், மாணவ, மாணவியர்கள் தங்கள் மிதிவண்டியை கொண்டு வந்து நிறுத்தினால், அந்த மூதாட்டி, மிரட்டி, அங்கிருந்து மாணவ, மாணவியரை விரட்டிக்கொண்டு இருந்தார்.

இது குறித்து ஈரோடு அட்சயம் பொதுநல அமைப்பினர் வசம் தகவல் தெரிவிக்கப்பட்டது. நவீன்குமார் தலைமையிலான குழுவினர் நேரில் வந்து, மூதாட்டியிடம் பேசி, தங்கள் மையத்திற்கு செல்ல ஒப்புதல் பெற்றனர். இவரது பெயர் கவுந்தியம்மாள், 70. இவரை அங்கயே குளிக்க வைத்து, புதிய ஆடை கொடுத்து அணிய வைத்து, போலீசார் மற்றும் வருவாய்த்துறை ஒப்புதலுடன் ஈரோட்டில் உள்ள தங்கள் மையத்திற்கு அழைத்து சென்றனர். அட்சயம் குழுவினரை இப்பகுதி பொதுமக்கள், பள்ளியின், தலைமையாசிரியை கவுசல்யாமணி, பி.டி.ஏ. நிர்வாகிகள் ரவி, கந்தசாமி உள்பட பலரும் பாராட்டினர்.

Tags

Next Story