அத்திக்கடவு-அவினாசி திட்டம்: அமைச்சர் முத்துசாமி புதிய தகவல்

அத்திக்கடவு-அவினாசி திட்டம்:  அமைச்சர் முத்துசாமி புதிய தகவல்

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் இன்னும் 16 குளங்கள் மட்டுமே சோதனையோட்டம் நடைபெற வேண்டி உள்ளது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நசியனூரில் அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தை வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானம் அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். வேறு உள்நோக்கம் ஏதும் கிடையாது என்றும் கடை மடை பகுதிக்கு தண்ணீர் சீராக சென்றடைய வேண்டும்.

இதற்காக நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சீரமைப்பு திட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்ற அவதிப்பு எதுவும் செய்யவில்லை என்றார். அத்திகடவு அவினாசி திட்டத்தில் இன்னும் 16 குளங்கள் மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டி உள்ளதாகவும்,

ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும் என்றார். டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன எனவும் நீதிமன்ற உத்தரவுப்படி ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story