கல் பலகையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஆய்வு செய்த தொல்லியல் துறை ஆலோசகர் ஸ்ரீதரன் !
கல்வெட்டு
இடைக்கால சோழர்களின் கடைசி மன்னரான அதிராஜேந்திரன் சோழன், இக்கோவிலை கட்டியதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது என கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை அருகே மேவளூர்குப்பம் கிராமத்தில், வல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை திருப்பணி செய்வதற்காக, ஹிந்து அறநிலையத்துறை ஸ்ரீபெரும்புதுார் ஆய்வாளர் சுரேஷ், தொல்லியல் துறை ஆலோசகர் ஸ்ரீதரன் ஆகியோர், நேற்று முன்தினம் கோவிலை நேரில் பார்வையிட்டனர். அப்போது, கோவில் அருகே கல் பலகையில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஆய்வு செய்தனர். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதரன் கூறியதாவது: தொண்டை மண்டலத்தில் சோழர், பல்லவர் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான கோவில்கள், செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன. அந்த வகையில், மேவளூர்குப்பத்தில் கட்டப்பட்ட 950 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இடைக்கால சோழர்களின் கடைசி மன்னரான அதிராஜேந்திரன் சோழன், இக்கோவிலை கட்டியதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்."
Next Story