தடகளப் போட்டி: தமிழக மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை

சர்வதேச அளவிலான 400 மீ., தடகளப் போட்டியில் தமிழக மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

சர்வதேச அளவிலான 400 மீ., தடகளப் போட்டியில் தமிழக மாணவன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மன்னாடிபட்டி கிராமப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கம் வென்ற மாணவருக்கு பேனர் வைத்து பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். வேலு லட்சுமி என்பவரது இளைய மகன் தனுஷ் Bsc Nursing படித்து வருகின்றார்.

இவர் பள்ளி பருவத்தில் இருந்தே தடகளப் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றி சாதனைகளைப் படைத்து வந்த சூழ்நிலையில் தற்பொழுது கல்லூரி பருவத்திலும் விடாமுயற்சியில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வென்று சாதனை படைத்து வந்த சூழ்நிலையில். தற்பொழுது கல்லூரி நிர்வாகத்தின் மூலமாக நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான400 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் ஹாங்காங் பகுதியில் நடைபெற உள்ள உலக அளவிலான தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ள நிலையில் போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தங்கப்பதக்கம் வாங்கித் தருவதாக உறுதி அளித்தார்.

Tags

Next Story