விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 403 மது பாட்டில் பறிமுதல்

ஆத்தூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்ட 403 மது பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்படி பகுதியில் வீட்டில் மது விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சுப்பு மகன் ராயர் என்பவரது வீட்டில் விற்பனைக்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. போலீசார் வருவதை அறிந்த ராயர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, பீர்,பிராந்தி 403 மது பாட்டில்களை மதுவிலக்கு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பியோடிய ராயரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story