ஆத்தூர் : 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த தம்பதியர் உயிருடன் மீட்பு !

ஆத்தூர் : 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த தம்பதியர் உயிருடன் மீட்பு !

உயிருடன் மீட்பு

ஆத்தூர் : 100 அடி விவசாய கிணற்றில் தவறி விழுந்த தம்பதியர் உயிருடன் மீட்க்கப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஈச்சம்பட்டி ஒன்பதாவது வார்டு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் மகன் வெங்கடேஷ் (42).இவருக்கு கவிதா (32) என்று மனைவி உள்ளார். விவசாயியான இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தின் அருகில் 100 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடி தண்ணீர் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் அவ்வழியாக சென்ற போது நிலை தடுமாறி தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தம்பதியரின் அலறல் சட்டத்தை கேட்ட அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர் இருந்த போதிலும் இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது.

இது குறித்து உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் அசோகன் தலைமையிலான வீரர்கள் கயிறு மற்றும் மீட்பு வலை மூலம் கணவன் மனைவி இருவரையும் தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து அவர்களை சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீயணைப்பு துறையினரின் துரித நடவடிக்கையால் கணவன் மனைவி இருவரும் உயிருடன் மீக்கப்பட்டதால் அப்பகுதி பொதுமக்கள் தீயணைப்பு துறையினரை பொதுவாக பாராட்டினர்.

Tags

Next Story