ஆத்தூர் : நகராட்சி வருடாந்திர குத்தகை ஏலம் ஒத்திவைப்பு
ஆத்தூர் நகராட்சி அலுவலகம்
ஆத்தூர் நகராட்சி வருடாந்திர குத்தகைளத்தில் திமுக கவுன்சிலர்கள் சிண்டிகேட் அமைக்க முடியாததால் ஏலம் திடீர் ஒத்திவைப்பு இடத்திற்கு பணம் கட்டியவர்கள் ஏமாற்றம்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வருடாந்திர குத்தகை இடங்களான பேருந்து நிலைய கழிப்பிடம், எடை பார்க்கும் கருவிகள் அமைவிடம், டிவி வர்த்தக விளம்பர ஒளிபரப்பு அனுமதி உள்ளிட்ட 13 வருவாய் இனங்களுக்கான ஏலம் நகராட்சி ஆணையாளர் சையத் முகமது கமால் முன்னிலையில் நடைபெற்ற ஏலத்தில் 30க்கும் மேற்பட்டோர் முன்வைப்புத் தொகைகளை கட்டி ஒப்பந்த புள்ளி மற்றும் ஏலத்தில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இந்நிலையில் ஒப்பந்தப்புள்ளி பெட்டியில் யாரும் ஒப்பந்தப்புள்ளி போடாத நிலையில் பொது ஏலத்திற்கான அறிவிப்பு செய்யப்பட்டது ஆனால் திமுக கவுன்சிலர்கள் ஏலம் எடுக்க வந்திருந்தவர்களிடம் சிண்டிகேட் அமைத்து தான் ஏலம் கேட்க வேண்டும் நாங்கள் சொல்வதற்கு தான் கட்டுப்பட வேண்டும் என மிரட்டும் தோணியில் பேசியதால் ஏலம் கேட்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், பொது ஏலம் நடத்தப்படும் என நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து அறிவிப்புகளும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தும் ஏலத்திற்காக பணம் கட்டியவர் யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர் இதனால் இரண்டு மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக நடைபெற இருந்த ஒப்பந்த புள்ளி மற்றும் பொது ஏலம் ஒத்திவைக்கப்படும் என அறிவித்தனர் ஏலத்தில் கலந்து கொள்ள முன்வைப்புத் தொகை கட்டிய நபர்களுக்கு வரும் 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்ட ஏலம் நடைபெறும் என அறிவிப்பு நோட்டீசை நகராட்சி ஊழியர்கள் வழங்கி உள்ளனர். .
Next Story