ஆத்தூரில் அதிமுக ஆலோசனை ௯ட்டம்

ஆத்தூரில் நாளை நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்திற்கான நகர,ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கு தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில் ஆத்தூர் நகராட்சி முன்பு நாளை காலை நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதற்கும் , போதை கலாச்சாரத்தில் இருந்து இளைஞர்களை காக்கவும் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயசந்திரன் நகர செயலாளர் மோகன் உள்ளிட்ட நகர,ஒன்றிய,பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story