ஆத்தூர் : அதிமுகவினர் மனித சங்கலி போராட்டம்

மனித சங்கலி போராட்டம்

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மற்றும் மூளை முடக்கில் எல்லா இடங்களிலும் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளான கஞ்சா, போதை மாத்திரை, போதை ஊசி உள்ளிட்ட போதைப் பொருட்களை அதிக அளவில் பயன்படுத்துவதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி அவர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாகி வருகிறது. இதைகட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது .
அதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகிழ்ச்சியில் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய்சங்கரன் ஆத்தூர் நகர செயலாளர் மோகன் ஒன்றிய செயலாளர்கள் நகர ஒன்றிய பேருக்க கழக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர்


