ஆத்தூர் : தடுப்பு சுவரில் கார் மோதி விபத்து - இருவர் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர், 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தென்னங்குடுபாளையம் சேதம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் புத்திரக்குலியை சேர்ந்த சின்னப்பன் தனது காரில் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல், கார்த்தி,க் ராஜீவ் காந்தி, நவநீதகிருஷ்ணன், பார்த்திபன் ஆகியோருடன் சேலத்தில் இருந்து அரியலூர் சென்று கொண்டிருந்தபோது காரை ஒட்டி வந்த சினப்பனின் கட்டுப்பாட்டு இழந்த கார் சாலையின் தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ராஜீவ் காந்தி உயிரிழந்தார் படுகாயம் அடைந்த சின்னப்பன், சக்திவேல், கார்த்திக், பார்த்திபன், நவநீதகிருஷ்ணன் ஆகியோர் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் கார்த்திக் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்தார் ஆபத்தான நிலையில் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இந்த விபத்து குறித்து நகரப் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story