ஆத்தூர்: மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர்:  மத்திய பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறை மூலம் சட்ட விரோதமாக. முடக்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கண்டித்து ஆத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை மூலம் சட்டவிரோதமாக முடக்கி 1123 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் முன்பு சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அர்த்தனாரி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் இதில் காங்கிரஸ் பேரியக்கத்தை சிதைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசு கண்டித்து மத்திய பாஜக அரசு கண்டித்தும், வருமானவரி துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story