ஆத்தூர் : ஐஸ் பாக்ஸ் தர்பூசணி சாகுபடி அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

ஆத்தூர் : ஐஸ் பாக்ஸ் தர்பூசணி சாகுபடி அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

ஐஸ் பாக்ஸ் தர்பூசணி

ஆத்துார் பகுதியில் புதிய தொழில்நுட்பத்தில் ‘ஐஸ் பாக்ஸ் தர்பூசணி’ சாகுபடி அதிகரிப்பு விளைச்சல் மற்றும் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, பைத்துார் கிராமத்தில் அம்மன் நகர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு கொண்டு கோடை வெயிலின் சீசனை இலக்காக வைத்து, 100 ஏக்கருக்கு மேல் தர்பூசணி சாகுபடி செய்யவும், சில ஆண்டுகளாக விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போதைய சீசனில், தர்பூசணி மற்றும் ஐஸ்பாக்ஸ் தர்பூசணி எனும் வீரிய ரக தர்பூசணி சாகுபடி செய்வதிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சாகுபடியால் வழக்கமாக சாகுபடி செய்யும் தர்பூசணி, 8 முதல், 12 கிலோ வரை எடை கொண்ட தர்பூசணி 90 நாளில் அறுவடை செய்யப்படும். ‘ஐஸ் பாக்ஸ்’ எனும் வீரிய ரக தர்பூசணி ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யலாம். 60 நாளில், அறுவடை செய்யப்படும் வீரிய ரக தர்பூசணி ஒரு பழம் 2 கிலோ முதல், 5 கிலோ வரை எடை இருக்கும்.இந்த பழங்கல் மிகுந்த இனிப்பு சுவையுடன் இருக்கும். இந்த பழம், தமிழகத்தை விட கேரளா, பெங்களூருவில் தான் அதிகளவில் விற்பனையாகிறது.

Tags

Next Story