ஆத்தூர் : மும்முனை மின்சாரம் கேட்டு விவசாயிகள் மனு

மும்முனை மின்சாரம் கேட்டு ஆத்தூர் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் மனு அளித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாசல் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் 34 ஆயிரத்து 661 பேருக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு தொடர்ந்து வழங்கி வந்த நிலையில் தற்போது மும்முனை மின்சாரம் பல மணி நேரம் வழங்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களுக்கான நீர் பாய்ச்ச முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைமைக்கு வந்துள்ளதாகவும். தற்போது லோக்சபா தேர்தலுக்குப் பின் மும்முனை மின்சாரம் 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரம் மட்டுமே வழங்கப்படுவதால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைவாசல், வீரகனூர், கெங்கவல்லி பகுதியில் உள்ள விவசாயிகள் தலைவாசல் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். தொடர்ந்து விவசாயிகள் ஆத்தூரில் உள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு கோட்ட செயற்பொறியாளர் ராணியிடம் விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களுக்கான மும்முனை மின்சாரம் இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு வழங்கினர்கள். கோட்ட செயற்பொறியாளர் உயர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Tags

Next Story