ஆத்தூர்: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவி
சேலம் மாவட்டம் ஆத்தூரில் செயல்பட்டு வரும் ராசி விதைகள் நிறுவனம் மற்றும் கோவை இதயங்கள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் இன்று அம்மம்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த முகாமினை ராசி குழும தலைவர் டாக்டர் ராமசாமி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இதயங்கள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் கிருஷ்ணன் பேசுகையில் தமிழகத்தில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் ராசி நிறுவனம் தற்போது சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முதல் வகை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருத்துவ செலவான ரூ 36 லட்சம் தற்போது வழங்கி அவர்களின் வாழ்வில் புதிய விடியலை துவக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது தற்போது இதயம் அறக்கட்டளையின் சார்பில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 2000 பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சிகிச்சைகளையும் தொடர் கண்காணிப்பையும் செய்து வருகின்றோம் எங்களின் இந்த முயற்சியின் காரணமாக தற்போது முதற்கட்ட சக்கரை நோய் பாதிப்பில்லாமல் 95 சதவீதம் கண்டு வருகிறோம் இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முறையான சிகிச்சியை பெறவில்லை என்றால் சிறுநீரக பாதிப்பு கண் குருடாதல் கோமா நிலைக்கு தள்ளப்படுதல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது.
எனவே நோய் பாதிப்புக்கு உள்ளான ஏழை குடும்பத்தினர் எங்கள் அறக்கட்டளை மூலம் முழுமையான பலனை பாதுகாப்பினை அடைந்திட கேட்டுக்கொள்கிறேன் விழாவில் பாரதியார் கல்லூரி நிறுவன செயலாளர் டாக்டர் ராமசாமி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் கோவிந்தராஜ் கவிஞர் சுந்தரம் சேவை சங்கங்களை சேர்ந்த ராஜா ராமச்சந்திரன் ஜோ வழக்கறிஞர் மாதேஸ்வரன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.