ஆத்தூர்: உணவக சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து

ஆத்தூர்: உணவக சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து

 தீ விபத்து

ஆத்தூர்: உணவக சமையல் அறையில் கேஸ் சிலிண்டர் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையம் முன்பு வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான உணவகம் செயல்பட்டு வருகிறது . இந்த உணவக பின்புறத்தில் சமையல் செய்யும் கூடம் அமைந்துள்ளது . உணவகத்தில் நேற்று இரவு வழக்கம் போல் கடை மூடிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து இன்று காலையில் வழக்கம் போல் பணியாளர்கள் காலை சமையல் செய்ய ஆயத்த பணி ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது சமையல் அடுப்பு அருகில் கேஸ் சிலிண்டர் கசிவு இருப்பதை அறியாமல் பணியாளர் கேஸ் பற்ற வைத்துள்ளார். இதில் தீடிரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அப்போது பணியில் இருந்த ஊழியர்கள் அலறி அடித்து சமையல் கூடத்தை வீட்டு வெளியே வந்தனர். உடனடியாக பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மளமளவென எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து துரிதமாக செயல்பட்டு அணைத்து உள்ளே இருந்த மூன்று சிலிண்டர்களையும் வெளியேற்றினர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் தீ மேலும் பரவாமல் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story