ஆத்தூர் : புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை பவனி

ஆத்தூர் அருகே ராணிப்பேட்டை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருளப்பன் தலைமையில்நடந்த புனித வெள்ளி சிறப்பு சிலுவைப்பாதை பவனியில் 500 க்கும் ஏற்பட்ட கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டையில் புனித ஜெய ராகினி அன்னை ஆலயத்தில் ஏசு பெருமான் மக்களுக்கு பல பல அற்புதங்களை செய்ததாகவும் அதை தடுக்த்திடும் வகையில் பிளாப் என்ற தலைவன் அவனுடைய அடி ஆட்களும் ஏசு பெருமானை சாட்டையால் அடித்து சித்திரவதை செய்து உயிருடன் சிலுவையில் அறைந்து ரத்தம் சொட்ட சொட்ட சிலுவையை சுமந்தவாறு முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து பொதுமக்களுக்கு தத்துரூவமாக செய்து காட்டி காண்போரை வியக்கவைத்துள்ளது,

சிலுவைபாதை புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்திலிருந்து 500க்கும் மேற்பட்ட கிருஸ்தவ பெருமக்கள் உடையார்பாளையம் கல்லறைத்தோட்டம் வரை சென்றடைந்தனர்.சிலுவைப்பாதையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு 14 சிலுவைப்பாதை நிலைகளையும்,இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளையும் தியானம் செய்து அமைதி ஊர்வலமானது கல்லறைத்தோட்டத்தில் நிறைவடைந்தது.சிலுவைப்பாதையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு 14 சிலுவைப்பாதை நிலைகளையும்,இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு வார்த்தைகளையும் தியானம் செய்து அமைதி ஊர்வலமானது கல்லறைத்தோட்டத்தில் நிறைவடைந்தது.

Tags

Next Story