ஆத்தூர் : அரசு மருத்துவமனையில் போதையில் இளைஞர் ரகளை

ஆத்தூர் அருகே செல்லியம்பாளையத்தில் போதையில் கார் ஓட்டி வந்த இளைஞர்கள்.. முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து. மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனையில் போதை இளைஞர் ரகளை - காவல் உதவி மையம் சேதம்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள செல்லியம்பாளையத்தில் சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி நோக்கி செங்கல் பாரம் ஏற்றிச் கொண்டு லாரி சென்றது. அவ்வழியே கோயம்புத்தூரில் இருந்து, சென்னை நோக்கி ஷிப்ட் கார் சென்றது. முன்னால் சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணித்த இரு இளைஞர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த போக்குவரத்து போலீசார் இரண்டு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அப்போது மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் விசாரணையில் காரில் பயணித்த கோயம்புத்தூரைச் சேர்ந்த பிரவீன் (27), சிவா (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் சிகிச்சைக்காக, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் தங்களை தாக்கியதாக கூறி பிரவீன் ரகளையில் தொடர்ந்து ஈடுபட்டார். சாலையில் படுத்து மறியல் செய்தார். அரசு மருத்துவமனை வளாகத்தில் உள் ஆத்தூர் நகர காவல் உதவி மையத்தில் இருந்த, மின்சார பெட்டிகளை சேதப்படு தி, மின் வயர்களை கடித்தும், மருத்துவமனை வளாகத்தில் இருந்த கம்பிகளை கொண்டு தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுபோதையில் மிரட்டல் விடுத்து, பிரவீன் என்பவர் அடாவடியில் ஈடுபட்டார். ஒரு மணி நேரத்திற்கு மேலாக ரகளை செய்து வந்த பிரவீனை, போலீசார் சமாதானபடுத்தி சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, பிரவீன் மது போதையில் இருந்தது தெரியவந்தது. முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த இருவரிடம், ஆத்தூர் டி.எஸ்.பி., சதீஷ்குமார், மற்றும் ஆத்தூர் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story