ஆத்தூர் : கல்லாநத்தம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு பின் மாரியம்மன் தேர் வெள்ளோட்டம்

ஆத்தூர் : கல்லாநத்தம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்கு பின் மாரியம்மன் தேர் வெள்ளோட்டம்

 மாரியம்மன் தேர் வெள்ளோட்டம்

கல்லாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள பழமையான மாரியம்மன் கோவில் 27 ஆண்டுகளுக்குப் பின் ₹40 லட்சம் ரூபாயில் கோவில் தேர் புரணமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் தேரை இழுத்து வழிபட்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் பகுதியில் இந்து சமய அறநிலைத்துறை சார்ந்த பழமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தேர் சேதமடைந்த நிலையில் புதிதாக ₹40 லட்சம் மதிப்பீட்டில் 12 அடி உயரத்தில் தேர் வடிவமைக்கப்பபட்டது. 27 ஆண்டுகளுக்கு பின் திருத்தேர் வெள்ளோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கருப்பையா செல்லியம்மன் சுவாமிகளுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து திருத்தேர் வெள்ளோட்டம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் பேர் வெள்ளோட்டம் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

Tags

Next Story