ஆத்தூர் : தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட அதிகாரிகள்
நரசிங்கபுரம் பேருந்து நிலைய பகுதியில் தலைவர்களின் சிலைகளை துணியால் மூடாமலும்,பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமலும் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தலைவர்களின் சிலை துணிகளால் மூடப்பட்டு கொடிகள் பேனர்கள் அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையப் பகுதியில் தலைவர் சிலை துணிகளால் மூடாமலும் கொடிக்கம்பங்கள் அகற்றாமலும் பேனர்கள் அகற்றாமலும் தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு அதிகாரிகள் அலட்சியப் போக்கோடு செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
Next Story