ஆத்தூர்: ஸ்ரீமகாசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்

ஆத்தூர் அருகே பழைய உடையம்பட்டி அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் நடந்த வைகாசி திருவிழாவில் 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பரைய உடையம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் திருக்கோவிலில் வைகாசி திருவிழா முன்னிட்டு கடந்த மாதம் 27 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு அருள்மிகு ஸ்ரீ விநாயகருக்கு கணபதி ஹோமம் சக்தி அழைத்தல் பூச்சாற்றுதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி அம்மனுக்கு பல்வேறு வகையான சிறப்பு அலங்காரமும் பூஜைகளும், திருவீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

இதையொட்டி இன்று 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து பழைய உடையம்பட்டி, நரசிங்கபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர் பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலை நீண்ட வரிசையில் காத்திருந்து அருள்மிகு ஸ்ரீ மகாசக்தி மாரியம்மனுக்கு ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷத்துடன் பாலை ஊற்றி அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்கள்

Tags

Next Story