ஆத்தூர் : தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்க காவல்துறையினர் கொடி அணிவகுப்பு

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் காவல்துறை சார்பில் RDO அலுவலகத்தில் இருந்து கொடி அணி வகுப்பு தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார்.
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் சேலம் மாவட்டம் ஆத்தூரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் ஆத்தூர் காவல்துணை கண்காணிப்பாளர் சதிஸ்குமார் தலைமையில் போலீசார் கொடி அணிவகுப்பில் கலந்துக்கொண்டனர். இந்த அணி வகுப்பில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 19 கம்பெனி ஆர்மி ரிசர்வ் படையினர் கூடுதல் எஸ் பி மஞ்சுரூலா மேத்தா தலைமையில் 78 பேர் மற்றும் போலீசார் உட்பட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.தேர்தல் பாதுகாப்பாக நடப்பதற்காகவும், தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமும் இன்றி 100% வாக்களிக்க காவல்துறை உறுதுணையாக இருப்பதை உணர்த்தும் விதமாக துப்பாக்கி ஏந்தியவாறு கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

Tags

Next Story