ஆத்தூர் : தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து

ஆத்தூர் அருகே தனியார் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 11 பள்ளி குழந்தைகள் 3 ஆசிரியர்கள் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பள்ளி குழந்தைகள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வாள் கரடு பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த தனியார் பள்ளியில் மஞ்சினி நடுவலூர் வலையமாதேவி உள்ளிட்ட பல்வேறு கிராம புற பகுதியில் இருந்தும் பேருந்து மற்றும வேன்கள் மூலம் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை ஆத்தூர் மஞ்சினி ஒதியத்தூர் நடுவலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதியில் இருந்தும் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றி வளையமாதேவி வழியாக பள்ளியை நோக்கி 40க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களும் பள்ளி பேருந்தில் சென்று கொண்டிருந்தது அப்போது வளைம்மாதேவி ரோட்டில் எதிர்பாராதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 11 பள்ளி குழந்தைகளும் மூன்று ஆசிரியர்களும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர்த்தப்பினர்கள். இதனை அடுத்து அங்கு இருந்த பொதுமக்கள் காயமடைந்த குழந்தைகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் தகவல் அறிந்து வந்த ஆத்தூர் ஊரக போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இந்த ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் பிரியதர்ஷினி காவல்துறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story