ஆத்தூரில் 96.4 மி.மீ., மழை பதிவு
ஆத்தூர் பகுதியில் 9.6 செ.மீ மழை பதிவானது.இது தமிழக அளவில் நேற்று பதிவான மழையில் இரண்டாவது அதிகபட்ச மழை ஆகும்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கம் இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். நேற்று, இரவு 10:00 மணி அளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்ததால், சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் கல்வராயன் மலையில் பெய்த கனமழையில் ஆணைவாரி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆத்தூர் பகுதியில் 96.4 மில்லி மீட்டர் மழையாக பதிவாகியுள்ளது. சேலம் மாவட்ட அளவில் அதிக மழையும், தமிழக அளவில் இரண்டாவது இடமாக ஆத்தூர் பகுதியில் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
Next Story