ஆத்தூர் : காவல்துறை தடுப்புகளால் விபத்து அபாயம்
சாலை தடுப்புகள்
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்விற்காக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் காவல்துறையால் வைக்கப்பட்ட சாலை தடுப்புகள் அகற்றப்படாமல் இருப்பதால் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக சார்பில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அதிக அளவு தொண்டர்கள் வருகையை ஒட்டி காவல்துறை சார்பாக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்ட் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவற்றை தற்போது வரை காவல்துறையினர் அகற்றாமல் இருப்பதால் சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story