ஆத்தூர்: சிலம்பம் திருவிழா

ஆத்தூர் அருகே கல்பகனூரில் தற்காப்பு பயிற்சி கூடத்தின் சார்பில் பல்வேறு வகையான சிலம்பம் தீபந்தம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது ஏராளமான பொதுமக்கள் சிலம்ப திருவிழாவை கண்டு கழித்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் ஆதித்த கரிகாலன் தற்காப்பு பயிற்சி கூடம் இப்பகுதியில் செயல்பட்டு வருகிறது. மேலும் மாணவ மாணவிகள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு வகையான தொந்தரவுகளில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள இந்தக் கலை உதவிகரமாகவும் இருக்கும் என்பதற்காக சுமார் நான்கு ஆண்டுகளாக இந்த கலைக் குழுவின் நிறுவனர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் விஜயகுமார் ராஜேந்திரன் மணி ஆகியவர்கள் இணைந்து பயிற்சி அளித்து வந்துள்ளனர், இந்த நிலையில் இன்று பௌர்ணமி நாளான சித்திரை முழு நிலவு விழா மற்றும் நான்காம் ஆண்டு மாபெரும் சிலம்பத் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து நடைபெற்ற தற்காப்பு மற்றும் சிலம்பம் கலை நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகள் சிலம்பம், நெடுங்கம்பு, குறுந்தடி, ஒற்றைக் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வால், பட்டாக்கத்தி, கேடயம் அலங்கார சிலம்பம், சவுக்கு, குத்து வரிசை, பிடி வரிசை,தீப்பந்தம் ,திருசூலம் உள்ளிட்ட 84 வகையான போட்டிகள் இங்கு பொதுமக்களை கண் கவர்ந்து வியக்கும் அளவுக்கு தங்களது திறமையை மாணவர்கள் வெளிப்படுத்தினர்கள். இந்த நிகழ்ச்சியில் கல்பகனூர் கொத்தம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சியை பார்த்து வியந்து பாராட்டினர்கள்.

Tags

Next Story