ஆத்தூர் : தந்தையை தாக்கிய மகன் கைது

ஆத்தூர் : தந்தையை தாக்கிய மகன் கைது

ஹரிஹர சுப்பிரமணியன்

நரசிங்கபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக தந்தையை தாக்கி கையை உடைத்த மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி( 62) ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருக்கு ஹரிஹர சுப்பரமணியம் மகன் இவருக்கு திருமணமாகி தனது மனைவியை பிரிந்து தந்தையுடன் வாழ்ந்து வருகிறார். மேலும் இவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வருவதாக ௯றப்படுகிறது. இந்நிலையில் அடிக்கடி தனது தந்தை ராமசாமி இடம் மகன் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது இதில் ஹரிஹர சுப்பிரமணியன் தனது தந்தை என்று பாராமல் ராமசாமியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது இதில் ராமசாமிக்கு கையில் எழும்பு முறிவு ஏற்பட்டது சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வரும் ராமசாமி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து மகன் ஹரிஹர சுப்பிரமணியத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story