ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலம் சரி செய்யப்படுமா?

ஆத்தூர் தாமிரபரணி புதிய ஆற்றுப்பாலம் சரி செய்யப்படுமா?

பாலம் சரிசெய்ய கோரிக்கை

திருச்செந்தூர் - தூத்துக்குடி முக்கிய போக்குவரத்து நடைபெறும் தாமிரபரணி ஆற்று பெரிய பாலம் மூடப்பட்டு மூன்று மாதங்களாகியும் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் , ஆத்தூரில் திருச்செந்தூர்- தூத்துக்குடி போக்குவரத்தின் உயிர் நாடியான தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு காமராஜரால் திறந்து வைக்கப்பட்ட பழைய பாலம் உள்ளது. பல புயல் வெள்ளம் வந்தபோதும் இன்று வரை கம்பீரமாக காட்சியளித்து போக்குவரத்தை சீர் செய்து வருகிறது. பாலம் சிறியதாக இருந்தாலும் வெள்ளம் வரும் போது பாலத்தின் மேல் தண்ணீர் செல்வதாலும் இதன் அருகே சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்தது. புதிய பாலம் கட்டிய சிறிது நாட்களிலேயே பாலத்தின் இணைப்பில் பழுது ஏற்பட்டு பின்பு சரி செய்யப்பட்டது.

தற்போது கடந்த டிசம்பர் மாதம் நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் நடந்த வரலாறு காணாத பெரும் வெள்ளத்தில் பல பாலங்கள் இடிந்து விழுந்தன. முக்காணி ஆத்தூர் தாமிரபரணி ஆற்றில் உள்ள சிறிய பாலத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேல் உள்ள தடுப்புக் கம்பிகள் வெள்ளத்தில் சின்னாபின்னமாகி உடைத்து நொறுக்கப்பட்டன. ஆனாலும் பாலம் கம்பீரமாக நின்று இன்று வரை போக்குவரத்தை சீர் செய்து வருகிறது. ஆனால் தற்போது கட்டப்பட்ட புதிய பாலத்தில் நடுப்பகுதியில் உள்ள தூண் ஒன்று கனரா வாகனம் சென்ற போது பாரம் தாங்காமல் இறங்கி பாலத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாலம் பழுதுபார்த்த பின் இப்பாலம் அதிக பாரம் தாங்கும் வல்லமை இல்லாததால் பாலத்திற்கு முன் செக்போஸ்ட் அமைத்து அதிக பாரத்தோடு வரும் கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி அதிக பாரம் தாங்கக்கூடிய ஏரல், ஸ்ரீவைகுண்டம் அல்லது திருநெல்வேலி பாலம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விட வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கை.

Tags

Next Story