ஆத்தூர்: விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சேலம் மாவட்டம்,ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது தொடர்ந்து இரவில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசிங்கபுரம் தென்னங்குடி பாளையம், தாண்டவராயபுரம், செல்லியம்பாளையம், ராமநாயக்கன்பாளையம்உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

Tags

Read MoreRead Less
Next Story