திமுக வேட்பாளர் பெயருடன் விளம்பரம் வரையும் பணி தீவிரம் !

திமுக வேட்பாளர் பெயருடன் விளம்பரம் வரையும் பணி தீவிரம் !

திமுக

ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈச்சம்பட்டி, சீலியம்பட்டி, அப்பாம்ம சமுத்திரம் உள்ளிட்ட பகுதியில் மக்களவை த் தேர்தலை முன்னிட்டு திமுகவினர் தங்களது வேட்பாளர் பெயருடன் கூடிய தேர்தல் விளம்பரங்களை வரையும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கட்சியை சார்ந்த தங்களது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் வேட்பாளர்களின் பெயர்களும் கூடிய சின்னங்களை வரையும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்துர், மல்லியகரை, சீலியம்பட்டி, அப்பம்மசமுத்திரம், தென்னங்குடி பாளையம் ,ராமநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளரை பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து திமுக வேட்பாளர் பெயருடன் கூடிய தேர்தல் சுவர் விளம்பரங்களை தீவிரமாக எழுதும் பணியில் திமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story