ஆத்தூர்: முட்டல் நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வெள்ளாநத்தம் ஊராட்சியில் கல்வராயன் மலை அடிவாரத்தில் ஆனைவாரி முட்டல் நீர்வீழ்ச்சி பூங்கா படகை எல்லாம் வனத்துறையினர் சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது இந்நிலையில் பல்வேறு மாவட்ட நகர பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை நாட்களில் நீர்வீழ்ச்சியில் குளித்தும் பூங்காவில் விளையாடும் படகு சவாரி செய்தும் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் கல்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக நீர்வீழ்ச்சி நீர்வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து வந்த நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் காவல் துறையினர் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதி மறுத்தனர் இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்