ஆத்தூர் : தொகுதி மண்டல அலுவலர்கள் பயிற்சி
பயிற்சி வகுப்பு
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொகுதி மண்டல அலுவலர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்துதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதி மண்டல அலுவலர்களுக்கு ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சிர் பிரியதர்ஷினி தலைமையில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள் எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் தபால் வாக்குகள் எவ்வாறு பெற வேண்டும் என்னென்ன வழிமுறைகள் பின்னபற்ற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் வட்டாட்சியர் பாலாஜி, தனி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், அன்னபூரணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story