ஆத்தூர் : வடசென்னிமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி சத்தாபரணம்
வடசென்னிமலை ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாள் முன்னிட்டு சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தன்று திருத்தேர்விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அதைத் தொடர்ந்து பங்குனி உத்திர திருத்தேர்விழா கடந்த மாதம் 17ந் தேதி விக்னேஸ்வரர் பூஜை,வாஸ்து பூஜை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றத்துடன் தொடங்கிய நிகழ்ச்சி, மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் ,திருக்கல்யாணம் சுவாமி திருவீதி உலா,மூலவர்களுக்கு பாலபிஷேகம் ராஜ அலங்காரம் மகாதீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கடந்த 25ந்தேதி திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது.
கடைசி நாள் சத்தாபரணம் நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணிய சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார், இதனையடுத்து காட்டுக்கோட்டை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாலசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்தனர்.