ஆத்தூர் : போட்டித்தேர்வு மாணவர்களிடம் வட்டாச்சியர் கலந்துரையாடல்

ஆத்தூர் : போட்டித்தேர்வு மாணவர்களிடம் வட்டாச்சியர் கலந்துரையாடல்
X

மாணவர்களிடம் வட்டாச்சியர் கலந்துரையாடல்

ஆத்தூர் அருகே நூலகத்தில் போட்டித் தேர்வுக்காக படிக்கும் மாணவ, மாணவிகள் உடன் தலைவாசல் வட்டாட்சியர் அன்புச் செல்வன் அவர்கள் போட்டி தேர்வில் எவ்வாறு பங்கேற்க வேண்டும் போட்டித் தேர்வுக்கான ஆயத்த பணிகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது
சேலம் மாவட்டம் ஆத்தூர் செயல்பட்டு வரும் மாவட்ட கிளை நூலகம் 1955 இல் உருவாக்கப்பட்டு இந்த கிளை நூலகம் தற்போது 2450 சதுர அடி பரப்பளவில் 80 ஆயிரம் நூல்களைக் கொண்டும் மூன்று தலங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்க்கு பல்வேறு பகுதியிலிருந்து நாள் ஒன்றுக்கு 200க்கும் மேற்பட்ட வாசகர்கள் வந்து செல்கின்றனர்.குரூப் 4 குரூப் 2 குரூப் 1 தேர்வுகளுக்கான புத்தகங்கள் குழந்தைகளுக்கான மெய்நிகர் நூலகம் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அடங்கிய நூலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு போட்டித் தேர்வுக்கு படித்து 18 பேர் அரசு பணியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போட்டித் தேர்வுக்கு தற்பொழுது படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு தலைவாசல் வட்டாட்சியர் அன்புச் செழியன் மற்றும் மருத்துவர் சுகுணா பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டி தேர்வுக்கு எவ்வாறு படிக்க வேண்டும் போட்டித் தேர்வுக்கு எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது.

Tags

Next Story