ஆத்தூர் : உலக காச நோய் தின விழிப்புணர்வு பேரணி

ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் துவங்கிய உலக காசநோய் தின விழிப்புணர்வு பேரணியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் விழிப்புணர்வு பேரணியை இந்திய மருத்துவ சங்க தமிழ்நாடு கிளை மாநிலத் தலைவர் (தேர்வு) மருத்துவர் செங்குட்டுவன், மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் மருத்துவர் கணபதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியானது ஆத்தூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி காமராஜனர் சாலை சாரதா ரவுண்டானா புதிய பேருந்து நிலையம் ராணிப்பேட்டை வழியாக புனித சூசையப்பர் பள்ளியில் நிறைவு பெற்றது. பேரணியில் காச நோயை ஒழிப்போம், மனிதத்தை காப்போம், உள்ளிட்ட விழிப்புணர்வு வாசங்களை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பங்கேற்றனர் மேலும் பேரணியில் மருத்துவர்கள்,தனியார் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மருத்துவமனை பணியாளர்கள் மருந்து வணிக சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story