அட்மா தொழில் நுட்ப ஆலோசனை கூட்டம்

அட்மா தொழில் நுட்ப ஆலோசனை கூட்டம்
X
கிள்ளியூரில் அட்மா கூட்டம்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் நடந்த அட்மா தொழில் நுட்ப ஆலோசனை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்ட்டு ஆலோசனை வழங்கினர்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் வட்டார அட்மா தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் கிள்ளியூர் வேளாண்மை துறை அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வேளாண்மை குழு தலைவர் கீழ்குளம் கோபால் தலைமை தாங்கினார். கிள்ளியூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் முரளி ராகிணி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கிள்ளியூர் வட்டார அட்மா திட்டத்தில் 2023-24 ஆண்டுக்கான மூன்றாம் தவணையாக வரப்பெற்றுள்ள நிதி ரூபாய் 2 லட்சத்து 1500 - ஐ இனம் வாரியாக பகிர்ந்து அளித்திட நிதி ஒப்புதல் குறித்து விவாதிக்கப்பட்டது.

கிராம ஊராட்சிகள் தன்னிறைவு அடையும் பொருட்டு கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2023-24 இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முள்ளங்கினா விளை மற்றும் மத்திகோடு ஆகிய பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அளித்து அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது . நிகழ்ச்சியில் இணை வேளாண்மை அலுவலர் ஜெகன்ஸ் பாபு, அட்மா அலுவலர்கள் ஜோசப் ஆக்னல், ஸ்டெபிஷா மற்றும் வட்டார ஆலோசனை குழு உறுப்பினர்கள் லாசர், எஸ் எம் கான், தங்கத்துரை, லீலா, கிறிஸ்டல் பபி கலந்து கொண்டனர்.

Tags

Next Story