கூடுதல் வட்டி கேட்டு தாக்குதல் - நிதி நிறுவன ஊழியா்கள் கைது

கூடுதல் வட்டி கேட்டு  தாக்குதல் - நிதி நிறுவன ஊழியா்கள் கைது

பைல் படம் 

மதுரை அருகே கூடுதல் வட்டி கேட்டு தாய், மகனை தாக்கிய நிதி நிறுவன ஊழியா்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி ராம் நகரைச் சோந்த கந்தசாமி மனைவி ஈஸ்வரி (42). இவா் விருதுநகா் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியாா் நிதி நிறுவனத்தில் குடும்பத் தேவைக்காக ரூ. 45 ஆயிரம் கடன் பெற்றாா். இதற்காக மாதந்தோறும் ரூ.4,800 செலுத்தி வந்தாா். இந்த நிலையில், மாா்ச் மாத தவணையை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, நிதி நிறுவன ஊழியா்கள் தாமதத்துக்காக கூடுதல் வட்டி கேட்டதால் இதை ஈஸ்வரியும், இவரது மகன் ஸ்ரீராமும் தட்டிக் கேட்டனா்.

இந்த நிலையில், நிதி நிறுவன ஊழியா்களான மதுரை கீழவைத்தியநாதபுரத்தைச் சோந்த அஜித்குமாா் (24), பேரையூா் அருகே துள்ளுக்குட்டிநாயக்கனூரைச் சோந்த முத்துராஜ் (29) ஆகிய இருவரும் ஈஸ்வரியின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டனா். அப்போது ஈஸ்வரியையும், ஸ்ரீராமையும் அவா்கள் தாக்கினா். இதுதொடா்பாக ஈஸ்வரி அளித்தப்புகாரின் மதுரை அருகே கூடுதல் வட்டி கேட்டு தாய், மகனை தாக்கிய நிதி நிறுவன ஊழியா்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.பேரில் தே. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து நிதி நிறுவன ஊழியா்கள் அஜித்குமாா், முத்துராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

Tags

Next Story