பெரியகுளத்தில் கொடுத்த கடனை கேட்டு தாக்குதல்: காவல்துறையினர் வழக்குப்பதிவு
காவல் நிலையம்
பெரியகுளத்தில் கொடுத்த கடனை கேட்டு தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமி புரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் பிரபாகரன் என்பவரிடம் ரூபாய் 50,000 வாங்கியுள்ளார். அந்த பணத்தை மாதம் சிறு சிறு தொகையாக கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் பட்டாளம்மன் கோவில் தெருவில் நடந்து சென்ற முருகனை வழிமறித்து பிரபாகரன், விஜயலட்சுமி, திலகவதி, தினேஷ், உதய பிரகாஷ் ஆகியோர் பணத்தைக் கேட்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதுகுறித்து காவல்துறையினிடம் அளித்த புகாரின் பேரில் ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story