கன்னியாகுமரி கடற்கரையில் பெண்  உட்பட 3 பேர் மீது தாக்குதல்

கன்னியாகுமரி கடற்கரையில் பெண்  உட்பட 3 பேர் மீது தாக்குதல்
பைல் படம்
கன்னியாகுமரி கடற்கரையில் பெண்  உட்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் சுபினா (23). இவருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த பிரதீஷ் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று கன்னியாகுமரி 16-ம் கல் மண்டபம் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது சுபினாவின் சகோதரரும் உடன் இருந்தார். அப்போது மூன்று பேர் கொண்ட கும்பல் வந்து கேலி கிண்டல் செய்தனர். இதை பிதீசும் சுபினாவின் சகோதரர் மணிகண்டனும் கண்டித்தனர். அப்போது ஆத்திரமடைந்த கும்பல் அவர்கள் 3 பேரையும் தாக்கியது. இந்த சம்பவத்தை பார்த்தது அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் அலறயடித்து ஓடினர். இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடம் சென்று படுகாயம் அடைந்த பிரதீஷ், மணிகண்டன், சுபினா ஆகியோரை கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கன்னியாகுமரி ஒற்றையால் விளை பாலாஜி (22), மாதவரம் பகுதி சேர்ந்த சங்கர் (21) அதே பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் ஆகியோர் சேர்ந்து கேலி கிண்டல் செய்து, தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை அடுத்து மூன்று பேர் மீது ஆறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story