அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் - போலீசார் விசாரணை

காவல்துறை விசாரணை

உளுந்துார்பேட்டை அருகே அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் - போலீசார் விசாரணை.
உளுந்துார்பேட்டை அருகே முன்விரோதத்தில் அ.தி.மு.க., நிர்வாகியை தாக்கிய தி.மு.க., ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த செங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார், 42; அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க., ஊராட்சி துணைத் தலைவரான அண்ணாமலைக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. குளம் மராமத்து பணிக்காக மண் அடிப்பதற்காக அண்ணாமலை தரப்பினர் நேற்று முன்தினம் லாரியை ஓட்டிச் சென்றனர். ஏரி மண் அடிக்க செல்வதாக நினைத்து ஜெயக்குமார் மற்றும் அவரது தரப்பினர் லாரியை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அண்ணாமலை தரப்பினர் இரும்பு ராடால் ஜெயக்குமாரை தாக்கினர். படுகாயமடைந்த ஜெயக்குமார் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதேபோல் ஜெயக்குமார் தரப்பினர் அண்ணாமலையின் வீடு புகுந்து தாக்கி, அவரது மனைவி ஜெயந்தியை ஆபாசமாக திட்டி தாக்கினர். படுகாயமடைந்த ஜெயந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். ஜெயக்குமார் புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் அண்ணாமலை, அவரது மகன் அஜித்குமார், 23, சுரேஷ் பாபு, 20, ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். அண்ணாமலை மனைவி ஜெயந்தி புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story