சேலத்தில் ஓட்டல் ஊழியர் மீது தாக்குதல்
தாக்குதல்
சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன் ( 35). இவர் லைன்மேடு பகுதியில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் 35 வயதுடைய ஒருவர் வந்து உணவு ஆர்டர் செய்து உள்ளார். அந்த உணவு வகைகளை எடுத்து வந்த போது, மணிகண்டனுக்கும் சாப்பிட வந்தவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் திடீரென்று அவர் மணிகண்டனை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் ஊழியரை தாக்கி விட்டு தப்பி சென்றவரை தேடி வருகின்றனர்.
Next Story