தலைவாசல் அருகே நிலுவை சம்பளத்தை கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

தலைவாசல் அருகே நிலுவை சம்பளத்தை கேட்ட தொழிலாளி மீது தாக்குதல்

தலைவாசல்

தலைவாசல் அருகே நிலுவை சம்பளத்தை கேட்ட தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாயக்கண்ணன். இவரது மகன் சப்ரி (20). இவர் தலைவாசல் அருகே சிறு வாச்சூர் பொன்னொளி நகரைச் சேர்ந்த மூர்த்தி என்பவரது நெல் அறு வடை இயந்திரத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

அப்போது அவ ருக்கு உரிய சம்பளம் கொடுக்காமல் நிலுவை வைக்கப்பட்டு இருந்தது. நிலுவை சம்பளத்தொ கையை பலமுறை கேட் டும் மூர்த்தி கொடுக்க வில்லை. இதையடுத்து சபரி வேறு வேலைக்கு சென்று விட்டார். இதைய டுத்து, கடந்த 26ம் தேதி மாலை, சபரியை மூர்த்தி செல்போனில் தொடர்பு கொண்டு, நத்தகரை டோல்கேட் அருகே தான் இருப்பதாகவும், அங்கு வந்து சம்பளத்தை பெற் றுக்கொள்ளும்படி கூறி யுள்ளார்.

இதையடுத்து அங்கு சென்ற சபரியை, மூர்த்தி காரில் ஏற்றிச் சென்று கடுமையாக தாக் கியுள்ளார். கருமந்துறை, மெட்டாலா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஏறத்தாழ 6மணி நேரத் திற்கு மேலாக காரில் வைத்து சுற்றிக்கொண்டே தாக்கி உள்ளார். இதைய டுத்து சபரியை இறக்கி விட்டு சென்று விட்டார். அங்கிருந்து சபரி நடந்தே தனது சொந்த ஊரான வடகுமரைக்கு வந்துள் ளார். நடந்த சம்பவங் களை தனது பெற்றோரி டம் தெரிவித்தார்.

அவர் ஆத்தூர் அரசு மருத் துவமனையில் அனும திக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சபரி அளித்த புகாரின் பேரில், தலைவாசல் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story