வேதாரணியம் அருகே இடப்பிரச்சனையில் தாக்குதல்: போலீசார் விசாரணை

வேதாரணியம் அருகே இடப்பிரச்சனையில் தாக்குதலில் ஈடுபட்ட தாய்மாமன் மற்றும் அவரது மகன் ஆகிய இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரணியம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோடியக்காடு மீனாட்சி தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் காளிதாஸ் வயது 36 அதே பகுதியில் வசித்து வருபவர் வேலு மகன் நாகேந்திரன் காளிதாஸ் சின் தாய் மாமன் நாகேந்திரன் ஆவார் காளிதாஸ் வசிக்கும் இடம் தொடர்பாக நாகேந்திரனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் பிப்ரவரி எட்டாம் தேதி இரவு 9 மணிக்கு காளிதாஸ் வீட்டிற்கு வந்த நாகேந்திரன் அவர்களிடம் தகராறு செய்து கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதில் காயமடைந்த காளிதாஸ் சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 10 சனிக்கிழமை இரவு 7 மணிக்கு காளிதாஸ் வீட்டிற்கு வந்த நாகேந்திரன் மற்றும் அவரது மகன் மாதவன் ஆகிய இருவரும் சேர்ந்து பத்து மீது வீட்டுக்குள்ள நுழைந்து வீட்டில் இருந்த டிவி உட்பட வீட்டு உபயோக பொருட்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக காளிதாஸ் வேதாரண்யம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இப்பொழுது போலீசார் நாகேந்திரன் மாதவன் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்

Tags

Read MoreRead Less
Next Story