பரமத்திவேலூர் அருகே விரிவுரையாளர் மீது தாக்குதல்: கைது முற்றுகை

பரமத்திவேலூர் அருகே விரிவுரையாளர் மீது தாக்குதல்: கைது முற்றுகை

காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

பரமத்தி வேலூர் அருகே தனியார் கல்லூரி விரிவுரையாளரை தாக்கிய மூவரை கைது செய்யக் கோரி வேலூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் ராஜ்குமார். இவர் பரமத்தி அருகே உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை துரைராஜ் கறவை மாடுகள் வைத்து பால் கறந்து விற்பனை செய்து வருகிறார்.

அந்த மாடுகளுக்கு நன்செய் இடையாறு பகுதிகள் உள்ள சில வீடுகளில் மீதமாகும் கழனி தண்ணீரை சேகரித்து சேகரித்து வருவது வழக்கம். இந்த தண்ணீரை சேகரிப்பதற்காக ராஜ்குமார் அவரது வீட்டிற்கு அடுத்த வீதியில் சென்று கொண்டிருக்கும் போது அவரை நாய் துரத்தியதாக தெரிகிறது. அதனைப் பார்த்த ராஜ்குமார் நாயை கல்லை வீசி துரத்தியுள்ளார்.

இதனை பார்த்த நாயின் உரிமையாளர் யோகேஷ் தங்களின் வளர்ப்பு நாயே கல்லால் தாக்கியதாக ராஜ்குமாரை தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த யோகேஷின் தந்தை தந்தை சிவபாலன் சகோதரர் கோகுலேஷ் ஆகியோரும் தங்களின் நாயை கல்லால் தாக்கியதாக ராஜ்குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனை தடுக்கச் சென்றபோது ராஜகுமாரின் தந்தை துரைராஜ் யும் தாக்கியுள்ளனர். .இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து பரமத்திவேலூர் காவல் நிலையத்தில் புகார் அழைத்துள்ளனர்.

புகாரை பதிவு செய்த காவல்துறையினர் மேல் நடவடிக்கை எழுதும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், இதனை கண்டித்து நன்செய் இடையாரு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் ராஜ்குமாரை தாக்கிய தந்தை மகனகள் ஆகிய மூன்று பேரையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வேலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் மட்டும் இருந்ததால் அவர்கள் அனைவரும் காவல் நிலையம் முன்பு நீண்ட நேரம் காத்திருந்தனர். தகவல் அறிந்து காவல் நிலையத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் ரங்கசாமி மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா ஆகியோர்,

அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story