பல்லடம் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்: ஈஸ்வரன் கண்டனம்
ஈஸ்வரன் எம்எல்ஏ
நேற்று இரவு சுமாராக 11 மணியளவில் திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுக்கா, காமநாயக்கன்பாளையத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு அவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொண்டு நான்கு சக்கர வாகனத்தில் வந்து கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி சென்றிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கிறது.
நாளை 75வது குடியரசு தினவிழாவை கொண்டாட இருக்கும் இந்த சூழ்நிலையில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது வேதனை அளிக்கக் கூடியதாகவும் உள்ளது. இந்தியாவின் நான்காவது தூணாக கருதப்படுவது ஊடகங்கள் ஆகும்.
ஊடகங்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் செய்தி சேகரிப்பாளர்கள் ஆவர். செய்தி சேகரிப்பாளர்கள் மீது இது போன்ற தாக்குதல் நடத்தப்படுவதால் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை கண்டறிந்து அதை செய்திகளாக வெளியிடுவதற்கு மற்ற செய்தி சேகரிப்பாளர்களுக்கு அச்சம் ஏற்படும் வகையில் இந்த நிகழ்வு அமைகிறது.
இந்த கொடூர செயலை செய்தவர்களை காவல் துறை உடனடியாக கண்டறிந்து பாரம்பட்சம் பார்க்காமல் உடனடியாக சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டுமென்று காவல்துறைக்கு கோரிக்கை வைக்கிறேன்.
செய்தியாளர் தம்பி நேசபிரபு அவர்கள் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று கடவுளை பிரார்த்திக்கிறேன் ஏடா எம்எல்ஏ ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்