சொத்து கேட்டு பெற்றோர் மீது தாக்குதல் - மகன், மருமகள் கைது

சொத்து கேட்டு பெற்றோர் மீது தாக்குதல் - மகன், மருமகள் கைது

வழக்குப்பதிவு 

சொத்து கேட்டு பெற்றோர் மீது தாக்குதல் நடத்தியதால் மகன், மருமகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே காமக்காபாளையம் ஊராட்சி ஆத்து முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி (வயது 90), இவருடைய மனைவி சரஸ்வதி (80). இவர்களது மகன் சுப்பிரமணி. இவர் பெற்றோரிடம் இருந்து 4 ஏக்கர் விவசாய நிலத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க வேண்டும் எனக்கூறி சில ஆவணங்களை வாங்கி உள்ளார். இதற்கிடையே வயதான தம்பதி இருந்த வீட்டையும் எழுதி தருமாறு கூறி அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு அவருடைய மனைவி நீலாவதி உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டத்தில் சுப்பிரமணி, நீலாவதி ஆகிய 2 பேர் மீதும் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags

Next Story