ஆனந்தூர் அருகே ஏழு பேர் மீது தாக்குதல்

ஆனந்தூர் அருகே ஏழு பேர் மீது தாக்குதல்

காயமடைந்தவர்கள்

ஆனந்தூர் அருகே நிலத்தில் தண்ணீர் குழாய் அமைப்பதை தட்டி கேட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை அவரது ஊறவினரான ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரங்கநாதன் என்பவர் வாங்கியதாக தெரிகிறது.

அதில் பாண்டுரங்கனின் சகோதரி கல்பனா என்பவர் கையொப்பம் செய்யாமல் பத்திரம் கிரயம் செய்ததாகவும் இது குறித்து கல்பனா கடந்த 2018 ஆம் ஆண்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு தற்போது விசாரணையில்,

இருந்து வரும் நிலையில் ரங்கநாதன் மற்றும் அவரது மகன் பாலமுருகன் மற்றும் அவர் குடும்பத்தார் அந்த நிலத்தில் தண்ணீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது இதனை தட்டி கேட்க சென்ற பாண்டுரங்கன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மகேஸ்வரி சசிகலா ஹரிதாஸ் ஜீவிதா ஜீவா மோனிகா ஆகியோர் மீது சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

இதில் இரு தரப்பினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இது குறித்து பாண்டுரங்கன் கூறுகையில் என் மீதும் எனது மனைவியின் மீதும் இதுவரை மூன்று முறை தாக்குதல் நடத்தியும் இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஊத்தங்கரை காவல்துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது இது குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags

Next Story