இரணியல் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல்: 2பேர் கைது

இரணியல் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் தாக்குதல்: 2பேர் கைது

கைது செய்யப்பட்டவர்கள்

இரணியல் வாகன சோதனையில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய  2பேர் கைது செய்யப்பட்டனர்.

குமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜெயபால். இவர் புகார் மனு விசாரணைக்காக நேற்று முன்தினம் மதியம் குருந்தன்கோடுஅம்மன் கோவில் பகுதிக்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியாக மது அருந்திவிட்டு அதிவேகமாக மோட்டார் பைக்கில் குருந்தன்கோடு அடப்பு விளை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் ஆனந்(33) காரங்காடு பகுதியை சேர்ந்த ரெத்தினம் மகன் பிரபின் (29) வந்ததாக கூறப்டுகிறது. அப்போது மோட்டார் பைக்கை உதவி ஆய்வாளர் ஜெயபால் நிறுத்தி, அவர்களிடம் பைக்கிற்கு உரிய ஆவணங்களை கேட்டுள்ளார்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறபடுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த் மற்றும் பிரிவின் ஆகியோர் சேர்ந்து எஸ் ஐ ஜெயபாலை நடுரோட்டில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் உதவி ஆய்வாளருக்கு பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்ப்பட்டு உயிருக்கு போராடிகொண்டிருந்தார்.

பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் உதவி ஆய்வாளர் ஜெயபால் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் பத்மாவதி இருவர் மீதும் கொலை முயற்ச்சி மற்றும் பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்த நிலையில் இன்று குருந்தன்கோடு ஆசாரி விளை பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் இரணியல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

பின்இருவரையும் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய பின் நாகர்கோவிலில் உள்ள சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story