டீ மாஸ்டர் மீது தாக்குதல் - இருவர் கைது, ஒருவர் தலைமறைவு

மோர்பாளையம் தனியார் பேக்கரியில் டீ கொடுப்பதற்கு கால தாமதம் செய்த டீ மாஸ்டரை தாக்கி மண்டையை உடைத்த இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

திருச்செங்கோடு அருகே, மோர்பாளையத்தில் கேரளாவை சேர்ந்த நபர் பேக்கரி நடத்தி வருகிறார். இங்கு கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு 7 மணி அளவில் குடிபோதையில் மூணாம்பள்ளிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அபிஷேக்23, பெயிண்டிங் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். மேலும், அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி மகன் மோகன்27 தனியார் பஸ் கண்டக்டர். டெல்லியை சேர்ந்த பாபு இவர்கள் மூவரும் சேர்ந்து குடிபோதையில் டீ கொடுக்க ஏன் காலதாமதம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அந்த கடையில் பணிபுரிந்த டீ மாஸ்டர் கூடலூர் நாராயணன் மகன் அஜித் 27 என்பவரை டீ கண்ணாடி டம்ளர் உடைத்து மண்டையில் பின்புறத்தில் தாக்கினார்கள்.

உடனடியாக அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் மூன்று தையல் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் டீ மாஸ்டர் புகார் கொடுத்தார். நேற்று முன்தினம், மோர்பாளையம் பஸ் ஸ்டாப்பில் பஸ் காத்திருந்த அபிஷேக், மோகன் இருவரையும் மல்லசமுத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான பாபுவை தீவிரமாக போலீசார் தேடி வருகிறனர்.

Tags

Read MoreRead Less
Next Story