மணல் திருட்டை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல்
மணல் திருட்டை தட்டிக் கேட்ட விவசாயி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கட்டையங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்வராஜ் (வயது 64), இவரது நிலத்தின் அருகே அக்னி ஆறு என்னும் காட்டாறு செல்கிறது. இந்த காட்டாற்றில், பட்டுக்கோட்டை அடுத்த கழுகுப்புலிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஹரிஷ், மணி உள்ளிட்ட 4 பேர் அனுமதி இன்றி மணல் அள்ளியதாக கூறப்படுகிறது.
இதை தட்டிக் கேட்ட விவசாயி செல்வராஜை நான்கு பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயி செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.
Tags
Next Story