பெண்ணை தாக்கியவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை

பெண்ணை தாக்கியவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை
X

காவல் நிலையம் 

கருங்கல் அருகே பெண்ணை ஆபாசமாக பேசி தாக்கியவருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே குற்றுத்தாணி பகுதியை சேர்ந்தவர் நிஷா. இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி பயில் உள்ள வாய்க்காலில் குளிப்பதற்காக சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜஸ்டின் நிஷாவிடம் தவறான கண்ணோட்டத்தில் ஆபாசமாக பேசினார். இது பற்றி வீட் டில் உள்ளவர்களிடமும், வார்டு கவுன்சிலரிடமும் நிஷா முறையிட்டார். அவர்கள் ஜஸ்டினை கண்டித்தனர். இதை அடுத்து நிஷாவை ஜஸ்டின், அவரது மனைவி மற்றும் சகோதரி ஆகியோர் சேர்ந்து தாக்கி மிரட்டினர்.

இது பற்றி நிஷா புகாரின் பேரில் கருங்கல் போலீசார் விசாரித்து, ஜஸ்டின், அவரதுமனைவி கிரிஜா,சகோதரி தங்கம் ஆகியோர் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை இரணியல் நீதிமன்றத்தில் வந்தது. நடந்துவழக்கை விசாரித்த நீதிபதி அமிர்தீன், ஜஸ்டினுக்கு மூன்று வருட சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். ஜஸ்டினின் மனைவி கிரிஜாவுக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், ஜஸ்டினின் சகோதரி தங்கத்தை விடுதலை செய்தும் தீர்ப்பு அளித்தார்.

Tags

Next Story